வியாழன், 5 மார்ச், 2009

ஆர்யாவின் ’மதராசப்பட்டிணம்’ ஐம்பதுகளுக்கு முந்தைய கதை



திமிறும் இளமையும்,தினறடிக்கும் தோள்களுமாக தூள் கிளப்புகிறது ‘மதராசப்பட்டிணம்’ ஆர்யாவின் தோற்றம்.

கிரீடம், பொய்சொல்லப்போகிறோம் படங்களில் தனது கைவண்ணத்தை காட்டிய இயக்குனர்
விஜய்,ஆர்யாவுடன் கைக்கோர்க்கும் படம். கல்பாத்தி அகோரம்தான் தயாரிப்பாளர். சுதந்திர இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கும் 1945 காலக்கட்டத்தில் நடக்கும் கதையாம் இது. சுதந்திர நிகழ்வுகளும் காதலும் கலந்த திரைக்கதையை தீட்டியுள்ளாராம் விஜய்.


”டைட்டிலுக்கு பொருத்தமாக காமிராமேன் நீரவ்ஷா, கலை இயக்குனர் செல்வக்குமார் உதவியுடன் பழைய சென்னையை அதாவது மதராஸை கண்முன் நிறுத்துவது சவாலான வேலையாக இருக்கும்” என்கிறார் இயக்குனர்.” சுதந்திரப்போராட்ட காலத்தில்தான் இளமை திமிறிக்கொண்டு இருந்தது. அந்த கதாபாத்திற்கு அற்புதமாக பொருந்தியுள்ளார் ஆர்யா” என பாராட்டு சான்றிதழ் தருகிறார்.

எல்லாம் சரிங்க ஆர்யா ஜோடி பூஜாவா வேற ஆள? என்னும் முக்கியமான கேள்விக்கு பதில், வேற ஆளுதான். ’மிஸ் டீன் வேர்ல்டு 2009’ போட்டியில பட்டம் வென்ற லண்டன் பொண்ணு ஏமி ஜாக்சன்தான் கதாநாயகியாம். லண்டனுக்கே போய் கதை சொல்லி அட்வான்ஸ் கொடுத்திட்டு வந்திருக்காராம் இயக்குனர்.

படத்தையும், பார்ட்டியையும் சீக்கிரம் காட்டுங்கப்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக