வியாழன், 12 மார்ச், 2009

ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்



காற்றின் திசைக்கு ஒத்துப்போகும் ஏழெட்டு தலைமுடியுடன் தலைக்காட்டும்போதே நமக்கு சிரிப்பு வரவழைத்த ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்.

. 'நாரதரும் 4 திருடர்களும்' என்ற மேடை நாடகத்தில் 'ஓமக்குச்சி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் நரசிம்மன். தான் முதன்முதலில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரோடு நிஜப்பெயரையும் இணைத்துகொண்டதால் ஓமக்குச்சி நரசிம்மன் ஆனார். 150 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் 1500 க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

'ஔவையார்' என்ற படத்தில் முதல் முதலில் அறிமுகனாலும், 1969 லேயே 'திருக்கல்யாணம்' என்ற படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார். மிஸ்டர்பாரத்,சூரியன், குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், மீண்டும் கோகிலா, இந்தியன், ஜெண்டில்மேன், முதல்வன், போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். தனது ஒல்லியான உடம்பாலும், தனது முக நடிப்பாலும் எல்லா தரப்பு மக்களின் மனதிலும் இலகுவாக இடம்பிடித்துக்கொண்டார்.

தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நரசிம்மன், சில நாட்களாக மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டுவந்தார்.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார். அவரது உடல் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள வர்த்தகநிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நரசிம்மனின் இரண்டாவது மகள் நிர்மலா அமெரிக்காவில் வசிக்கிறார்.அவர் நாளை சென்னை வந்தபிறகே நரசிம்மனின் இறுதிச்சடங்கு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக