செவ்வாய், 3 மார்ச், 2009

ப்ரியதர்ஷனின் காஞ்சிவரம்



ப்ரியதர்ஷன் படம் இயக்குவது அத்திப்பூ என்றாலும் அவர் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றுமே தித்திப்புதான். கதையின் அம்சம், காட்சியமைப்பு, நடிகர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் லாவகம் என ப்ரியதர்ஷனின் ஃபார்முலா எல்லா ரசிகர்களையும் ரசிக்க வைக்கும்.

ரொம்பநாளாச்சுப்பா ப்ரியதர்ஷன் தமிழ் படம் எடுத்து.... என அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் ஆரம்பித்த படம்தான் காஞ்சிவரம். பப்ளிசிட்டியெல்லாம் பண்ணாமலேயே சட்டு புட்டுனு படத்தை எடுத்து முடித்த ப்ரியதர்ஷன் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யவில்லை. உலக திரைப்பட விழாக்கள் பலவற்றிற்கு அனுப்பிவைத்தார். திரைப்பட விழாவில் காஞ்சிவரத்தை பார்த்த திரையுலக புள்ளிகள் பலரும் படத்திற்கு பெரிய பாராட்டை கொடுத்தனர்.

ஒரு வருடமாக உலக திரைப்பட விழாக்களில் பவனிவந்த இப்படம் இம்மாதம் 13-ந் தேதி தமிழ்நாட்டில் வெளியாகவுள்ளது. பெர்செட் பிக்சர் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளனர். நெசவாளர்களின் பிரச்சனையை அலசும் கதை இது என்கிறார்கள். கம்யூனிச கொள்கைகள் கொண்ட வசனங்கள் நிறைய உள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக