செவ்வாய், 3 மார்ச், 2009

ஸ்ரீதேவிக்கு கல்யாணம்



விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் கடைக்குட்டி மகள் ஸ்ரீதேவி. இவரது சகோதரிகளான வனிதாவுக்கும், ப்ரீத்தாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. வனிதா, தொலைக்காட்சி நடிகர் ஆகாஷையும், ப்ரீதா, இயக்குனர் ஹரியையும் திருமணம் செய்து கொண்டனர். விஜய்குமாரின் மகன் அருண்விஜய்க்கும் கடந்த வருடம் திருமணம் நடக்கவே ஸ்ரீதேவியின் ரூட்டு கிளீயரானது.

இதனையடுத்து மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத்தொடங்கினர் அவரது பெற்றோர்கள். அதன்படி ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன அதிபர் ராகுலுக்கு ஸ்ரீதேவியை பேசி முடித்துள்ளனர். 'ரிக்ஷா மாமா', 'அம்மா வந்தாச்சு' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி. கதிர் இயக்கத்தில் 'காதல் வைரஸ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'தித்திக்குதே', 'தேவதையைக் கண்டேன்', 'ப்ரியமான தோழி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்

வருகிற 17-ந் தேதி சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டில் ஸ்ரீதேவிக்கும்-ராகுலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. ஜூன்-18-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாம். திருமணத்திற்கு பிறகு நடிப்பதுபற்றி எந்த முடிவும் எடுக்க வில்லையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக