புதன், 4 மார்ச், 2009

ரஜினியிடம் திடீர் இலக்கிய வாடை



அப்பப்போ இமயமலை சாமியாராக பேசிவரும் ரஜினி, திடீர்னு இலக்கியவாதி கணக்காக பேசியுள்ளார்.

கன்னடத்திரையுலகின் பவளவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ரஜினிதான். அரசியல்,கலை,பிரிவினை என கலந்துக்கட்டி போய்க்கொண்டிருந்த ரஜினியின் பேச்சு, சட்டென இலக்கியத்திற்கு தாவியது.

“ தமிழ் சினிமாவில் நாவல்களை அடிப்படையாக கொண்ட படங்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் வெற்றியும் பெருகிறது. ஆனால் கன்னடத்தில் நாவல்கள் படமாக்கப்பட்டதில்லை. இனியாவது அப்படியான முயற்சியில் இறங்கவேண்டும்.

பசவண்ணவர்,குவெம்பு போன்ற பல இலக்கியவாதிகள் படைத்த சிறந்த நாவல்கள் உள்ளது. அதனை படமாக்க முன்வரவேண்டும்.’ரக்தராத்திரி’ என்ற ஒரு நாவல் உள்ளது. இந்த நாவலில் வரும் தளவாய் மாத்தண்ணா கதாபாத்திரம் என்னை கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை கடவுள் எனக்கு தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன்” என்றார்.

யப்பா... யாராச்சும் ஸ்கிரிப்ட ரெடி பண்ணுங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக