திங்கள், 2 மார்ச், 2009

கமல் ரீமேக் செய்யும் ‘எ வெட்னஸ்டே’



நஸ்ரூதீன் ஷா - அனுபம் கேர் நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம் 'எ வெட்னஸ்டே'. இப்படத்தை 'தலைவன் இருக்கின்றான்' பெயரில் தமிழில் ரீ-மேக் செய்து நடிக்கிறார் கமல். இது தொடர்பாக மும்பை சென்றிருந்த கமல் படம் பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது :-

"சினிமாவில் டெக்னீசியனாக இருந்தால் அதிகம் சம்பாதிக்க முடியாது. நடிகனால்தான் முடியும் என்று ஒருமுறை டைரக்டர் கே.பாலசந்தர் சொன்னார். அதனால் நடிகனானேன். அதன் மூலம் சம்பாதித்ததை கொண்டு இப்போது டெக்னீசியனாகிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியில் வெளியான 'எ வெட்னஸ்டே' படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறேன். நஸ்ரூதீன் ஷா நடித்த பாத்திரத்தில் நடிக்கிறேன். அவருடைய நடிப்பை கண்டு வியந்தேன். நிறைய பயிற்சிகள் செய்து அந்த வேடத்தை செய்திருக்கிறார். அது எனக்கு லாபம். எந்த கஷ்டமும் இல்லாமல் அவர் நடிப்பை பார்த்து நான் நடிக்க வேண்டியதுதான்.

வேறு மொழியிலிருந்து படங்களை ரீ-மேக் செய்வது தவறில்லை. எல்லா ரசிகர்களையும் கவரும் வகையிலும், வலுவான கதையாகவும் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் ரீ-மேக் செய்யலாம். அதுபோல் நிறைய படங்கள் நல்ல முறையில் ரீ-மேக் செய்யப்பட்டும் இருக்கிறது. அந்த வகையில் 'எ வெட்னஸ்டே' நல்ல படம். அதனால் அதை ரீ-மேக் செய்ய முடிவு செய்தேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக