
சென்னை திரும்பியுள்ள இசைப்புயல், மூன்று ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.
தனது இல்லத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
”ஒரு தமிழனாய் பிறந்து ஆஸ்கர் விருது பெற்றதை நினைத்து பெருமையடைகிறேன். தமிழ், இந்தி என பிரித்து பார்ப்பதை நான் விரும்பவில்லை. எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். பாலிவுட்,ஹாலிவுட் என்று போனாலும் தமிழ் சினிமாவையும் மறக்கமாட்டேன். ஆஸ்கார் விருது பெற்ற பிறகு மூன்று ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த இரவு நேரத்திலும் எனக்கு வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு நன்று கூறுகிறேன்” என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக