புதன், 25 பிப்ரவரி, 2009

வைரமுத்துவின் தமிழ்த்தாய் வாழ்த்து




சர்க்கரை பொங்கல் போல வைரமுத்துவின் உரை, எப்போதுமே சுவை. சுவைக்கு சுவை சேர்ப்பதுபோன்ற ஒரு காரியத்தை செயலாக்க திட்டமிட்டுள்ளார் வைரமுத்து. ஏ.ஆர்.ரஹமான் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுவதுதான் அத்திட்டம்.

கே.ராஜேஸ்வர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்-நமிதா நடித்துள்ள படம் இந்திரவிழா. யதிஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. வைரமுத்து டிரைலரை வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுக்கொண்டார்.

விவேக், நாசர், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சிறப்பு விருந்தினர்கள் தங்களது உரை மூலம் பார்வையாளர்களை கவர, நமிதா தனது உடை மூலம் கவர்ந்த செய்தி தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியே!

"ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியுள்ளார். இந்திரவிழா இயக்குனர் ராஜேஸ்வரும் அப்படி திறமை படைத்தவர்தான். ஆங்கில இலக்கியங்கள் பற்றியும், ஹாலிவுட் சினிமா பற்றியும் ஏராளமாக தெரிந்துவைத்திருக்கிறார்" என பாராட்டினார் பத்மஸ்ரீ விவேக்.

கவிஞர் வைரமுத்து பேசியபோது, மகிழ்ச்சியும் முக்கியமும் கலந்த செய்தி ஒன்றை வெளியிட்டார்.

"நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் திட்டமொன்றை வைத்துள்ளோம். ஒருமுறை நான் மலேசியாவிற்கு சென்றபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க வேண்டிய நேரத்தில் வேறொரு பாடலை ஒலிபரப்பினார்கள். நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த...' பாடல் இந்திய எல்லைகளை வரையறுத்துதான் எழுதப்பட்டுள்ளது. இதில் எல்லா மாநிலங்களும் இடம்பெறும். ஆனால் தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரே மாதிரியான தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதற்காக புதிய தமிழ்த்தாய் வாழ்த்தொன்றை எழுதலாமே என்ற எண்ணம் வந்தது.

பாடல் எழுதுவது சரி, யார் அதற்கு இசையமைப்பது என்ற கேள்வி வந்தபோது, ரஹ்மானுக்கு போன்செய்து விஷயத்தை கூறினேன். அவரும் இசையமைப்பதாக ஒப்புக்கொண்டார். எனவே விரைவில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக