வியாழன், 26 பிப்ரவரி, 2009

ரஜினி நடிக்கும் 'அரசன்'



ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட்டை பயண்படுத்தி காசு பார்க்கும் ஆசையில்,இந்தியிலிருந்து தூசு தட்டப்பட்ட ஒரு படத்தை தமிழில் டப்பிங் செய்கிறது ஆர்.கே.மூவிஸ் என்னும் நிறுவனம்.

எட்டு வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து முதலுக்கு மோசமில்லாமல் சம்பாதித்துக்கொடுத்த படம் ‘கூன் கா கார்ஸ்'. இப்படத்தில் ரஜினிகாந்த், சஞ்சய்தத்,வினோத் கண்ணா நடித்திருந்தனர். இந்த மூவருக்கும் ஆளுக்கொரு ஜோடியாக டிம்பிள் கபாடியா,சரிகா,சங்கீதா பிஜ்லானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். ரஜினிக்கு இருக்கும் மவுசை மனதில்கொண்டு இப்படத்தை தமிழில் 'அரசன்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இரண்டேகால் மணி நேரம் ஓடும் படத்தில் ரஜினி வரும் காட்சிகள் ஒரு மணிநேரம் பத்து நிமிடங்கள் இடம்பெறுகிறதாம். ரஜினிகென்று மூன்று பாடல்களும், மூன்று சண்டை காட்சிகளும் இருக்கிறதாம். படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் நவீன தொழில்நுட்பத்தில் ரீ கரெக்‌ஷன் செய்யப்பட்டுள்ளதாம். படத்தை கியூப் மற்றும் ufo முறையிலும் பாடல்களை 5.1 டி.டி.எஸ் சவுண்ட் முறையிலும் உருவாக்கியுள்ளனராம்.

டப்பிங் படத்திற்காக ஜனவரி 16-ந் தேதி சென்சார் செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிந்துள்ள நிலையில் மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆடியன்ஸின் பல்ஸ் பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னையிலுள்ள பரணி ப்ரிவியூ தியேட்டரில் சில ரசிகர்களுக்கு படத்தை போட்டு காட்டியதாம் தமிழ் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக